ஸ்டெர்லைட் ஆலையை திறந்து மின்சாரமும் வழங்க வேண்டும் – தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு !

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையானது கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவந்த நிலையில்.அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து கடந்த மே மாதம் 22-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த போராட்டம் 100 நாட்களையும் கடந்து அதற்கு தீர்வு கிடைக்காததால் மக்கள் போராட்டத்தில்  ஈடுபட்டனர். அந்த போராட்டத்தை  கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 அப்பாவி பொது மக்கள் பலியாகினர்.

அடுத்து அந்த ஆலையை மூட உத்தரவுவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்டிருந்தது.மேலும் ஆலைக்கு தேவையான மின்சாரவசதியையும் செய்து தர வேண்டும் என கூறி உத்தரவிட்டது.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையூடு செய்தது. ஆனால் ஆலையை திறக்க அனுமதிகோரி வேதாந்த நிறுவனர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவும், அதற்கு தேவைப்படும் மின் இணைப்பை வழங்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை அமல் செய்யாத தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அளிக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட் உத்தரவை , தூத்துக்குடி ஆட்சியரே நேரடியாக போலீஸ் பாதுகாப்புடன் சென்று அமல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close