பிரதமர் மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் டி.வி சீரியல்கள் – தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார்

2019-ஆம் ஆண்டிற்க்கான நாடாளுமன்ற தேர்தலானது நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இது தொடர்பாக தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்கள் வெளியாகி வருகின்றது. குறிப்பாக பிரதமர் மோடியின் பயோபிக் படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் முறையுட்டிருந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக டிவி சீரியல்களின் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது என காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.

மேலும் மராட்டிய மாநிலத்தில் குறிப்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் திட்டங்களை ஆதரித்து மூன்று டிவி சீரியல்கள் இயங்கி வருகிறது. இத்தகைய நிகழ்வின் தொடர்பாக பா.ஜனதா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் , மூன்று டிவி சீரியல்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close