சீனாவில் திறக்கப்பட்டது வினோத கடை – ஆத்திரம் தீரும் வரை பொருட்களை உடைக்கலாம் !!

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் , பணம் கொடுத்து தனக்கு ஆத்திரமோ , கோபமோ இருந்தால் அது தீரும் வரை பொருட்களை அடித்து உடைக்க ஒரு தனி கடையே திறக்கப்பட்டுள்ளது. இந்த கடை மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் ஆத்திரமோ , கோபமோ இருந்தால் அதை தீர்க்க ஒரு கடை திறக்கப்பட்டுள்ளது. கோபத்துடன் வருபவர்களுக்கு அவர்களுக்கு அடிப்படாமல் இருக்க பாதுகாப்பு உடை மற்றும் பொருட்களை உடைக்க கட்டை போன்றவை வழங்கப்படுகிறது.

இவ்வாறு அடித்து உடைப்பதற்காகவே பழைய கடைகளுக்கு சென்று இதற்கென டி.வி , கடிகாரம் , தொலைபேசி என பல்வேறு பொருட்களை வாங்குகின்றனர். இதற்கு நேரத்திற்கேற்ப கூலி வாங்கப்படுகிறது, கிட்டத்தட்ட 30 நிமிடம் வரை பொருட்களை உடைத்தால் அதற்கு இந்திய ரூபாய் மதிப்பின் படி 5 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

இதில் திருமணமான பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கள் திருமணமான புகைப்படம் மற்றும் பொருட்களுடன் வந்து அதை ஆசைதீர உடைத்து செல்கின்றனர். இந்த கடைக்கு பெரும்பாலும் 20 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தான் அதிகமாக வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)
Close
Close