திருமணம் ஆகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த கூடாது ; மீறினால் ரூ.2 லட்சம் அபராதம்

இன்றுள்ள சூழ்நிலையில் செல்போன் தேவை என்பது ஒவ்வொரு மனித வாழ்க்கையுடனும் ஒன்றிவிட்டது. அப்படி இருக்கும் நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள பனஸ்கந்தா என்ற மாவட்டத்தின் சில ஊர்களில் திருமணம் ஆகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தாக்கூர் சமூக மக்கள் சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். அதில் ,அனைத்து தரப்பு மக்களும் செல்போனை பயன்படுத்துவதால் தான் குழப்பங்களும் ,பிரச்சினைகளும் அதிகரிக்கின்றன என கருதி அதை குறைக்கும் விதத்தில் தங்கள் இன மக்கள் வாழும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில்உள்ள திருமணம் ஆகாத பெண்கள் பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தடையை மீறி அப்பெண்கள் செல்போனை பயன்படுத்தினால் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இதை உடனடியாக அமல்படுத்தியுள்ளனர்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close