தென்னாப்பிரிக்காவில் தொடரும் வன்முறை பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

தென் ஆப்பிரிக்காவின் தலைநகரான கேப்டவுனின் பலபகுதிகளை பல காலமாக பல்வேறு ரவுடி கும்பல்கள் ஆக்கிரமித்து ஆதிக்கம் செய்து வருகின்றனர்.

இந்த ரவுடி கும்பலின் வன்முறையால் ஆண்டுதோறும் பல அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர்.இந்த ரவுடி கும்பலை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு ராணுவத்தை அனுப்பிவிடுமாறு அந்நாட்டு அரசுக்கு உள்ளூர் அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு அந்த ரவுடி கும்பல் வன்முறையை ஒடுக்குவதற்கு அதிபர் சிரில் ராமபோசா கும்பல் வன்முறை தடுப்பு போலீஸ் பிரிவை தொடங்கினார். இருந்தாலும் அப்பகுதிகளில் கும்பல் வன்முறை முடிவுக்கு வரவில்லை.

இந்நிலையில் இந்த ரவுடி கும்பலால் நடத்தப்பட்ட வன்முறையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.கொல்லப்பட்டவர்களில் 6 பேர் பெண்கள் அவர்கள் 18 யிலிருந்து 26 வயதிக்குட்பட்டவர்கள்.

இவ்வாறு 8 பேரை கொன்ற ரவுடி கும்பலை தேடும் பணியில் போலீசார் இறங்கியுள்ளனர். மேலும் இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்ற விவரம் தெரியவரவில்லை. இந்த கொலை வெறி செயலால் கேப்டவுனில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close