சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு;வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு

சென்னையில் கடந்த இரண்டு வருடங்களாக மழையானது பொய்த்துள்ளது. அதனால் ஏரிகளில் உள்ள தண்ணீர் வரத்தானது வெகு விரைவாக குறைந்துள்ளது. அதனால் சென்னைவாசிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த குடிநீர் தட்டுப்பாட்டை குறைக்க வீராணம் ஏரியில் இருந்து  தண்ணீர் திறக்கப்படுகிறது. கீழணையிலிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2023 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.வீராணம் ஏரியில் தற்போது 43.22 கனஅடி தண்ணீர் இருப்பு இருப்பதாகவும், சென்னையில் தற்போது ஏற்பட்டுள்ள்ள குடிநீர் தட்டுப்பாட்டின் காரணமாக வீராணம் ஏரிக்கு 62 கனஆதி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

இந்த தண்ணீர் இருப்பானது எவ்வளவு நாட்கள் வரை தாக்குப்பிடிக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது? என்பது ஒரு பக்கம் இருக்கும் போது இவ்வாண்டு பெய்யும் மழையை பொறுத்தே நம் அனைவரின் தண்ணீர் தேவையானது பூர்த்தி அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close