மிரட்டும் தொனியில் பேசியதால் கைது செய்யப்படுவரா? நடிகர் கொல்லம் துளசி

சபரிமலைக்கு பெண்கள் வழிபாடு நடத்த வந்தால் அவர்களை இரண்டு துண்டுகளாக வெட்டுவேன் என பேசிய மலையாள குணச்சித்திர நடிகர் கொல்லம் துளசி எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. இதனால் பெண்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்ல முயற்சி செய்து வருகிறார்கள் ஆனால் அவர்களை கோவிலுக்குள் செல்ல விடாமல் மறித்து போராட்டங்கள் நடக்கின்றன.

இந்நிலையில், நேற்று நடந்த போராட்டத்தின் போது சபரிமலை விவகாரம் தொடர்பாக மலையாள குணச்சித்திர நடிகர் கொல்லம் துளசியின் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டங்களாக வெட்ட வேண்டும். ஒரு துண்டை டெல்லிக்கும் மற்றொரு துண்டை திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதலமைச்சர் அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என அவர் பேசினார்.

அவரது இந்த பேச்சு கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக வாலிபர் சங்கம் , கொல்லம் துளசி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இதைத்தொடர்ந்து கொல்லம் துளசி முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கொல்லம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனை தொடர்ந்து கொல்லம் துளசி கேரள உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் உயர்நீதிமன்ற நீதிபதி வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனால் கொல்லம் துளசி எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close