ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் திருட முயன்ற வாலிபன் கைது!

திருத்தணியை அடுத்து உள்ள பெருமாள்தாங்கள் புதூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியை சரளா வயது 60. இந்நிலையில் ஓய்வு பெற்ற ஆசிரியை சரளா தன் வீட்டில் ஓய்வு கொண்டிருக்கும் போது அவரது வீட்டை ஒரு வாலிபன் சுற்றி வருவதை கண்டார்.

இதை கண்டு சந்தேகம் அடைந்த சரளா உடனே தன் உறவினர்களையும் , தன் அக்கம்பக்கத்து வீட்டினரையும் தகவல் கூறி அழைத்து அந்த வாலிபனை விசாரித்தனர். இத விசாரணையின் பொது அந்த வாலிபனிடம் கடப்பாறை, இரும்பு ராடுகள் மற்றும் புட்டு உடைக்கும் கருவிகள் இருப்பதை கண்டறிந்து அதை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அப்பகுதி மக்கள் அந்த வாலிபனை போலீசாரிடம் ஒப்படைத்ததுடன், அந்த பறிமுதல் செய்த பொருட்களையும் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அந்த வாலிபன் தென்காசியை சேர்ந்த ராமச்சந்திரன் 35 என்று தெரியவந்துள்ளது. மேலும் இந்த திருட்டை பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close